Wednesday, 29 February 2012

ஒளியின் கதை -2008


ஒளியின் கதை -2008

மேற்கு லண்டன் தமிழ் பாடசாலை லண்டன் 

குடும்பம் ஒன்றிற்கு யேசு குறித்து ஆசிரியர் விளக்கும் படியாய்
அரங்கம் 4 பிரிவாக ஆற்றப்படும்.

இதில் பதினைந்து மாணவர்கள் பங்குபற்றினார்கள்.

சுரமெழுப்பிகள் - லகர ள்ளகர ழகர நகர ண ன....... பின்வரிசை...

நிஜ பாத்திரங்கள் (மகள்- தாய்- தகப்பன்- ஆசிரியர்) மேடையை முறைப்படி ஆளுதல் இடம் மத்தி வலம் என.

உரையாளானாகிய ஆசிரியை மேடையின் முன் இடமாய் அறங்காற்றுதல்.

வெளிப்பாட்டு கனவு நிலை பாத்திரங்கள் மத்தியில் ஊடறுத்து ஆடுதல்.

* இதன் அரங்க ரகசியம் தொடரில் சொல்லுகின்றேன். 



ஒளிபிறந்த கதை -2008

--------------------------------

ஒளிபிறந்த கதை -2008
கிங்க்ஸ்பெரி தமில்பாடசாலை- லண்டன்  

கூர்ப்புத்தத்துவம் - ஒளி இருள் வெறுமை  உயிர் :

 உலக அன்னையின் நடனம் அதிலுருந்து உயிர்களின் படைப்பு, மனிதர், சமாதமானம் இழத்தல், ஏசாயா தீர்க்கதரிசனம் , தூதர்கள் முன்மொழிதல், பின்னர் இயேசு கிறிஸ்‌துவின் பிறப்பு. 

ஒளியே யேசு என்பதும். அந்த ஒளி நமக்குள் என்பதும் இதன் உட்பொருளாய் அமைத்து எழுதப்பட்ட அரங்கு. ஏறத்தாழ 20 பிள்ளைகள் பங்குபற்றினார்கள்.



இங்கே அரங்கு 3 பிரிவாய் ஆற்றப்படும்.

ஒலி எழுப்பி
சுழலும் உரையாளன் - இடம்

படைப்பின் பகுதி -          மத்தி 


வெளிப்பாட்டுப்பகுதி - வலம்


*இந்த அரங்கின் அதிசயம் நான் பெற்ற அனுபவமே அதனை அரங்கம் காட்டும் அதிசயம் எனும் தொடரில் எழுதுகின்றேன்.






===============================================
* பாலன் பிறப்போடு சம்பந்தப்பட்ட நாடகங்களை நத்தார் விழாவுக்காய் லண்டனில் தமிழ் பாடசாலையில் பழக்கி அரங்கேற்றினேன்.
இவற்றிலும் பல யுக்திகளையும் பாவித்தேன்.

யோபு - 1992


யோபு - 1992

தனி அரங்காய் பரிசுத்த வேதாகம வசனங்களைக் கொண்டே ஆக்கினேன். பல யுத்திகளைப் பாவித்தேன்.
முதலில் இந்தத் தனி அரங்குக்கெல்லாம் ஒரு இழுக்கும் பெட்டியில் எல்லா உடுப்புக்களையும் ஒப்பனைகளையும் கொண்டு செல்வேன்.

அரங்கை ஒப்பனை உடன் தொடங்குவேன்.
இதே யுக்தியை அக்னி நாடகத்திலும் பரிசோதித்தேன்.

மேற் சொன்ன நாடகங்களேல்லாம் நெதெர்லாந்தில் மேடையேற்றினேன். பெரும்பாலும் கிறிஸ்துமஸ்விழாவில் அவை இடம் பெற்றன.

ஜோவான் ஸ்நானகன் - 1990


ஜோவான் ஸ்நானகன் - 1990

இதுவும் பரிசுத்த வேதாகமத்திலுருந்து தயாரிக்கப்பட்ட அரங்காகும். இந்த அரங்கில் வளர்ந்தவர்கள்-வாலிபர்கள் பழகினார்கள்.
சபையிலுருந்து யேசு கிறிஷ்துவானவர் வருவதுபோல் இயக்கி இருந்தேன். எனது நாடகங்களில் பாரதி மீண்டும் வருகிறாரிலுருந்து இந்த யுக்தியைப்பாவித்தேன். 

நல்ல சமரித்தன் - 1989

நல்ல சமரித்தன் - 1989

இதில் இயேசு கிரீஸ்துவாய் பாத்திரமேற்றேன்-முழுக்க முழுக்க
வேதாகமத்திலுருந்து  இந்த அரங்கை ஆக்கினேன்.